உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சனிவார வழிபாடு

கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சனிவார வழிபாடு

கோபால்பட்டி: ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதன்படி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்க பெருமாள், ராமானுஜருக்கு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள், பால், பழம், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !