நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் மகா சண்டியாக பூஜை
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் மகா சண்டியாகம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆக., 6 காலை 5:45 மணிக்கு அனுக்கை, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கின. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை, நடந்தது.
நேற்று காலை 7:35 மணிக்கு இரண்டாம் கால பூஜையுடன் சண்டி யாகம் துவங்கியது. அதனை தொடர்ந்து வடுக, கன்யா, சுமங்கலி, தம்பதி, கோ பூஜைகள் நடந்தது. கலசங்கள் புறப்பாடு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஓம குண்டத்தில் பட்டு சேலை, பழங்கள், நெய் உள்ளிட்டவை ஊற்றி யாகம் நடத்தினர். விழாவிற்கு சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, கோயில் கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் நாராயணன் பங்கேற்றனர். நேற்று ஆடி வெள்ளியாக இருந்ததால் கண்ணுடைய நாயகி அம்மன் சன்னதியில் பக்தர்கள் மாவிளக்கு, நெய் தீபமேற்றி நேர்த்தி செலுத்தினர்.