உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராதாகிருஷ்ணர் கோயிலில் ஊஞ்சல் சேவையில் கஸ்துாரி ரங்கநாதர்

ராதாகிருஷ்ணர் கோயிலில் ஊஞ்சல் சேவையில் கஸ்துாரி ரங்கநாதர்

சென்னனுார்; ஆ டி நான்காம் வெள்ளியை ஒட்டி சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் வழக்கமான பூர்வாங்க பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்துாரிரங்கநாதர் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நித்தியனுசந்தானம் நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும், ராமானுஜர் நுாற்றந்தாதியை பக்தர்கள் பாராயணம் செய்தனர். சாற்றுமறையோடு வைபவம் நிறைவடைந்தது. மகளிருக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !