உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயநலவாதிகளின் அடையாளம்

சுயநலவாதிகளின் அடையாளம்

‘அரசியல்வாதிகளில் பலர் சுயநலமாக இருக்கிறார்களே... அவர்களை எப்படி அடையாளம் காண்பது’ என இளைஞன் ஒருவன் பாதிரியாரிடம் கேட்டான். சுயநலவாதிகளின் இயல்புகளை அவர் பட்டியலிட்டார்.    
*  ‘இந்த செயலில் ஈடுபட்டால் என்ன லாபம் கிடைக்கும் என்பதே சுயநலவாதிகளின் நோக்கமாக இருக்கும்.
* சுயநலத்துடன் பிறருக்கு  நன்மை செய்வர்.
*  தனக்கு சாதகமாக இருக்கும் செயல் பிறருக்கு பாதகமாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள்.  
* தனக்கு சாதகமாக இல்லாத நிலையில் பிறருக்கு நன்மை கிடைத்தால் அதை தடுத்து நிறுத்துவர்.   
* அண்டை வீட்டார், சமுதாயம், நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்காது.
* தன் வேலை முடிந்ததும் பிறரது நட்பு, தொடர்பை விலக்கிக் கொள்வர்.   
* ஆபத்து, அவசர நிலையில் கூட பிறர் மீது இரக்கப்பட மாட்டார்கள்.   
* இவர்களின் வாழ்வில் தியாகத்திற்கு இடமிருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !