ஆடி சோமவாரம்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :45 minutes ago
கோவை; ஆடி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமை மற்றும் திரயோதசி திதியை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை பகுதி மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் தர்மலிங்கேஸ்வரர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.