ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட பொன்னர் சங்கர் கோவில் திருவிழா
நத்தம்; நத்தம் அருகே பாதசிறுகுடி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட பொன்னர்,சங்கர் கோவில் திருவிழாவில் கிடாய்கள் வெட்டி அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர், வீரமகாமுனி சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் வருடந்தோறும் ஆடி படையல் திருவிழா நடைபெறும். இதையொட்டி இந்த ஆண்டிற்கான ஆடை படையல் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் வெட்டப்பட்டு சமையல் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து பொன்னர் சங்கர், வீரமகாமுனி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.பின்னர் சுவாமிக்கு படையிலப்பட்டது. தொடர்ந்து கோவில் முன் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் படையல் கறிவிருந்து நடந்தது. இதில் புதுப்பட்டி, புதூர், நடுவனூர், சிறுகுடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாதசிறுகுடி கிராம ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.