உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரையில் ஆடி அமாவாசைக்கு பக்தர்களுக்கு ஏற்பாடுகள் தயார்

சேதுக்கரையில் ஆடி அமாவாசைக்கு பக்தர்களுக்கு ஏற்பாடுகள் தயார்

திருப்புல்லாணி; ராமநாதபுரத்தில் இருந்து 14 கி.மீ., தொலைவில் திருப்புல்லாணி செல்லும் வழியில் சேதுக்கரை அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக சேதுக்கரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


சேதுக்கரை ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைக்கிணங்க, சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள கடற்கரை வளாகப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ருக் கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்வதற்காக ஏராளமானோர் வருகின்றனர். அதிகாலை 4:00 மணி முதல் மதியம் வரை புனித நீராடும் நிலையில் பக்தர்களுக்கான குடிநீர் வசதி, தற்காலிக நிழற்பந்தல்கள், போலீசாரின் கட்டுப்பாட்டு அறை, மின்விளக்குகள், கழிப்பறை வசதி, கடலில் போடக்கூடிய துணிகளை உடனுக்குடன் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து சேதுக்கரைக்கு வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !