உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் காட்டுத்தீ; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சதுரகிரி மலையில் காட்டுத்தீ; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் காட்டுத்தீ பரவுவதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


இக்கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஆக. 10 முதல் 13 வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று xபிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் சதுரகிரி அருகே நெடுங்குளம் பீட் 3 என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதால் இன்று சிவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருந்தனர். இருந்தபோதிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை தாணிப்பாறையில் குவிந்தனர். ஆனால் காட்டுத்தீ காரணமாக அவர்களை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் சில மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் அவர்களில் பெரும்பாலோனர் மாவூற்று உதயகிரிநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !