ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நாளை சயனசேவை உற்ஸவம்
ADDED :18 hours ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் திருநாளான நாளை இரவு சயனசேவை நடக்கிறது.
நாளை காலை 8:30 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல் நடக்கிறது. முக்கிய நிகழ்வான ஆண்டாள் மடியில் ரெங்க மன்னார் சயனசேவை இன்று இரவு 7:00 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை அத்திகுளம் ரோட்டில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்துள்ளனர்.