உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மாள் கோயில் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

நாகம்மாள் கோயில் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

மேலூர்: மேலூர் நாகம்மாள் கோயில் 62 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


இத் திருவிழாவை முன்னிட்டு இன்று 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மன்கட்டி தெப்பகுளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு மின் மோட்டார் மூலம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு அடி முதல் 25 அடி நீளம் உள்ள அலகு குத்தியும், காளி வேடமிட்டும் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்று (ஆக. 12) முளைப்பாரி ஊர்வலமும், புஷ்பத்தினால் ஆன தேரில் நாகம்மாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆக. 13 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும். மேலூர் டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !