உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் மாதேஸ்வரன் கோயிலுக்கு விரைவில் பாலாலயம்

பேரூர் மாதேஸ்வரன் கோயிலுக்கு விரைவில் பாலாலயம்

பேரூர்: பட்டீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு பிப்., ல் நடந்தது. தொடர்ந்து, உபகோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

உப கோயிலான உள்ள பேரூர் தெப்பக்குளக் கரையில் உள்ள மாதேஸ்வரன் கோயில் மற்றும் அங்காளம்மன் கோயிலுக்கு இன்னும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது.

இவ்விரு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மாதேஸ்வரன் கோயிலுக்கு இம்மாதம் பாலாலயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் உதவி கமிஷனர் சத்யவதி கூறுகையில்,‘‘இம்மாதம் மாதேஸ்வரன் கோயிலில், கும்பாபிஷேக பாலாலயம் செய்ய அறநிலையத்துறை கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கிடைத்ததும், பாலாலயம் செய்யப்படும். மாதேஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்ததும், அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !