விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
சேத்தியாத்தோப்பு: விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசை 1 லட்சத்து எட்டு பால்குடம் உற்சவ விழா நடந்தது.சேத்தியாத்தேப்பு குறுக்குரோட்டில் விநாயகபுரம் கருப்பாமி கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதவை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி இரவு தஞ்சை கரகம், பம்பை, சிலம்பு ஒலிக்க அங்காளம்மன் வீதியுலா நடந்தது.10 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியாண்டவர் பெரியநாயகி, அங்காளம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பெண்கள், பக்தர்கள் 1 லட்சத்து எட்டு பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, மதியம் 12 மணிக்கு காவல் தெய்வம் விநாயகபுரம் கருப்பசாமிக்கு பால்குடம் அபிேஷகமுகம், பகல் 1.00 மணிக்கு 18ம் படிககு சிறப்பு பூஜை அபிேஷகம் தீபாராதனை நடந்தது. பால்குட பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.