உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆடிப்பூர  உற்சவ தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதன் சுவாமி கோவில் உள்ளது. இத்தளத்தில் ஞானசம்பந்த பெருமான் தனது மூன்றாவது வயதில் உமையம்மை அளித்த ஞானபாலினை அருந்தி தோடுடைய செவியன் என்ற முதல் தேவார பதிகத்தை அருளிய தளமாக திகழ்கிறது.  இக்கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் சட்டை நாதர் சுவாமிகள் மூன்று நிலைகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். காசிக்கு இணையான பைரவ தளமாகவும் விளங்கி வருகிறது இக்கோவிலின் ஆடிப்பூர மகோற்சவம் கடந்த 4ம் தேதி பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் இருந்து அம்பாள், விநாயகர் புறப்பாடு செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினர் தொடர்ந்து திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரிலை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்தும், ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமைதானோர் செய்திருந்தனர். பத்தாம் நாள் விழாவான நாளை காலை 7:00 மணிக்கு பிரம்ம தீர்த்த கரையில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரியின் நிகழ்ச்சியும் இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !