திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :15 hours ago
திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
திருத்தணி பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று காலை, கோவில் வளாகத்தில் தாண்டேஸ்வரர் சுவாமிக்கும், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க, திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடந்தன. திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். பின், பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. நாளை மாலை 6:00 மணிக்கு, மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, ஆடிப்பூரத்தை ஒட்டி வளையல் அலங்காரம் நடக்கிறது.