உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் ஆடி வெள்ளி திருவிழா: காளி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்

திருப்புத்தூரில் ஆடி வெள்ளி திருவிழா: காளி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்

திருப்புத்தூர்: திருப்பத்தூரில் ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயிலில் கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு நடந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,அலகு குத்தியும்,அக்னிச்சட்டி ஏந்தியும்,பூக்குழி இறங்கியும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  


இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிகளில் பக்தர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.  ஆடிப்பிறப்பான முதல் வெள்ளியில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். நான்கு ஆடி வெள்ளிகளில் மூலவர் அம்மனுக்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் கூழ் ஊற்றுதல், மஞ்சள் அரைத்தல், காப்புக்கட்டுதல் நடந்தது. இன்று ஐந்தாவது கடைசி வெள்ளியை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு பக்தர்கள் ராமர் மடம் மற்றும் ஆதி திருத்தளிநாதர் கோயிலிலிருந்தும் பால்குடம் கட்டி ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக கோயில் வந்தனர். கோயில் ராஜகோபுரம் முன்பாக உள்ள பூக்குழுியியில் நீண்ட வேல் அலகு குத்தியும், கரகம் எடுத்தும்,அக்னி ஏந்தியும் பக்தர்கள் இறங்கினர். சிறுவர்,சிறுமியர் முதல் முதியவர்கள் வரை ஆண்,பெண் பக்தர்கள் ஏரளாமானோர் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். பத்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களால் மூலவர் அம்மனுக்கும்,பரிவாரத் தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், மாலையில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச்சொரிதலும் நடந்தது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர், செட்டியதெரு இளைஞர் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !