நாகாத்தம்மன் கோவில் ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் விமரிசை
ADDED :1 hours ago
செய்யூர்: செய்யூரில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் ஆடிப் பூர உத்சவத்தை முன்னிட்டு வளைகாப்பு உற்சவம் விமரிசையாக நடந்தது.
செய்யூர் குளக்கரை பகுதியில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம் அந்த வகையில், ஆடிப்பூர உத்சவத்தை முன்னிட்டு, திருமணம் ஆகாத பெண்கள் நேற்று அம்மனுக்கு வளையல் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து நாகாத்தம்மனுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 11:00 மணிக்கு வண்ண வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை செய்யப்பட்டது. பூஜை செய்யப்பட்ட வளையல்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. செய்யூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.