சிறுவாபுரியில் திருக்கல்யாணம்
ADDED :4629 days ago
கும்மிடிப்பூண்டி : சிறுவாபுரி பாலசுப்ரமணிய கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடை பெற உள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் உள்ளது, சிறுவாபுரி பாலசுப்ரமணிய கோவில்.திருமண தடை நீக்கும் இத்தலத்தில், நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகவும் பரசித்தி பெற்றது.சோழவரம் வட்டார, சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்த ஜன சங்கம் சார்பல், வரும், 3ம் தேதி அன்று, 4ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. திருமண வரம் வேண்டி, 2,000 பக்தர்கள், திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துக் கொள்வர் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. குழுவின் தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் ஞானசேகரன், செயலர் கோதண்டபாணி ஆகியோர், திருக்கல்யாண உற்சவத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.