மாமல்லபுரத்தில் இருந்து ஆந்திர நெல்லுார் கோவிலுக்கு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கற்சிலை
மாமல்லபுரம்: ஆந்திர மாநிலம் நெல்லுார் கோவிலுக்கு, மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கற்சிலை வடிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லுாரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் புதிதாக அமைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் வளாகத்தில், பெருமாளை நோக்கி நின்றவாறு வணங்கும் தோற்றத்தில், பிரமாண்ட ஆஞ்சநேயர் கற்சிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர், சிலை வடிப்பதற்காக சில மாதங்களுக்கு முன், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்பக்கூடத்திற்கு அனுமதி கோரினர். இதையடுத்து 21 அடி உயர ஆஞ்சநேயர் கற்சிலை கற்சிலை வடிவமைக்கப்பட்டது. சிலைக்கு வழிபாடு நடத்தி, பிரத்யேக டிரெயிலர் வாகனம் மூலம் நெல்லுாருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இன்று சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.