உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் முளைப்பாரி

பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் முளைப்பாரி

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் 34வது ஆண்டு ஆவணி திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஆக., 9 துவங்கி காப்பு கட்டப்பட்டு விழா நடக்கிறது. தினமும் அம்மன் மீனாட்சி, காமாட்சி, குமரி, மகாலட்சுமி உள்ளிட்ட அலங்காரங்களில் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து ராஜராஜேஸ்வரியாக கையில் கரும்பு ஏந்தி அருளினார். இன்று மாலை வீடுகளில் நேர்த்திக்கடன் இருந்து பாரி வளர்த்த பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இன்று காலை விரதமிருக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !