வளர்பிறை சஷ்டி; திருவாடானை கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :6 hours ago
திருவாடானை: திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திபாடல்களை பாடினர். பிரசாதம் வழங்கபட்டது.
* ராமநாதபுரம்: குமரய்யா கோயிலில் வள்ளி,தெய்வானையுன் முருகனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதுபோன்று குண்டுக்குரை சுவாமிநாதசுவாமி கோயில், வழிவிடுமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.