உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலுார் அருகே அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு

அரியலுார் அருகே அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு

பெரம்பலுார்: அரியலுார் அருகே, அம்மன் கோவில் சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலுார் மாவட்டம், வெள்ளூரில் இருந்து நக்கம்பாடிக்கு செல்லும் சாலையில், வெண்ணத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, இரு தினங்களுக்கு முன், வெண்ணத்தம்மன், அரியமுத்து சுவாமி சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியது நேற்று காலை தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், செந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !