உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் மொபைல் போனுக்கு தடை; கொண்டுவந்தால் பறிமுதல்

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் மொபைல் போனுக்கு தடை; கொண்டுவந்தால் பறிமுதல்

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் செப்., 1ம் தேதி முதல் தடையை மீறி மொபைல் போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில்களில், செப்., 1ம் தேதி முதல், மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வினய் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், செப்., 1ம் தேதி முதல் மொபைல் போன்கள் கொண்டு செல்ல தடை விதித்தும், தடையை மீறினால் மொபைல் போனை பறிமுதல் செய்யப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சத்யவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல் போனை, கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்ல, கடந்தாண்டு ஜூலை 24 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின் படி, வரும் செப்., 1ம் தேதி முதல் மொபைல் போனை கோயிலுக்குள் கொண்டு செல்ல முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, கோயில் நுழைவாயில் வலது புறம், மொபைல் போன் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த மையங்களில், பக்தர்கள், ஒரு மொபைல் போனுக்கு ஐந்து ரூபாய் கட்டணமாக செலுத்தி, மொபைல்போனை ஒப்படைத்துவிட்டு ரசீது பெற்று கொள்ளலாம். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து ரசீதனை காண்பித்து தங்களது மொபைல்போனை பெற்று கொள்ளலாம். இந்த உத்தரவை மீறி கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்து சென்றால், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !