காரைக்குடி சிறுவயல் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ADDED :6 hours ago
காரைக்குடி: காரைக்குடி அருகே ஓ. சிறுவயலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடந்தது.
காரைக்குடி அருகே ஓ. சிறுவயலில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான சிறுமிகள் பெண்கள் அனைவரும் தாங்கள் வளர்த்த முளைப்பாரியை எடுத்து வந்தனர். கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் சென்றது. தொடர்ந்து கோயில் குளக்கரையில் சிறப்பு தீபாரதனைகள் காட்டப்பட்டு முளைப்பாரியை கரைத்தனர். இதில் ஓ.சிறுவயல் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.