உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருகே கி.பி.8 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

செஞ்சி அருகே கி.பி.8 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

செஞ்சி: செஞ்சி அருகே கி.பி. 8ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுதாகர், ஆய்வு மாணவர்கள் முகில், ஈசாக் ஆகியோர் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். ஆய்வில் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பத்தை கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து முனைவர் சுதாகர் கூறியதாவது. பெருங்காப்பூர் மலை அடிவாரம் உள்ள மாந்தோப்பில் இந்த கொற்றவை சிற்பம் உள்ளது. 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட கல்லில் நான்கு கரத்துடன் சிலை உள்ளது. சிலையின் இடது கரத்தில் சங்கு, வலது கரத்தில் தமரும், கீழ் இடது கரம் இடுப்பின் மீதும், கீழ் வலது கரத்தில் தாமரை மெட்டுடனும், தலையில் கவசமும், காதுகளில் குண்டாலமும், இடுப்பில் ஒட்டியானம், கழுத்தில் ஆரம், உடலில் முழு ஆடையும் அணிந்து எருமை தலை மீது சமபங்கத்தில் நின்ற நிலையில், காணப்படுகிறது. சிற்ப வடிவமைப்பை கொண்டு இது கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தைச் சார்ந்த தாகும். குறிப்பாக தொண்டை நாட்டுப் பகுதியில் இது போன்ற கொற்றவை சிற்பம் பரவலாக காணப்படுகிறது. இப்பகுதியில் பழங்காலம் முதல் கொற்றவை வழிபாடு இருந்து வருகிறது. ஊர் மக்கள் இதனை காளியாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு முனைவர் சுதாகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !