அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
ADDED :5 hours ago
காஞ்சிபுரம்: நாயகன்பேட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் அபிராமியம்மை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து, தினமும் காலை 8:00 மணிக்கு மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு ஹோமம் மற்றும் கலச பூஜையும், தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீப ஆராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அமிர்தகடேஸ்வரர் வீதியுலா வந்தார்.