பரமக்குடி சாத்தாயி அம்மன் குதிரை வாகனத்தில் ராஜாவாக பவனி
ADDED :53 days ago
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட விழா நிறைவு நாளில் அம்மன் குதிரை வாகனத்தில் ராஜாவாக பவனி வந்தார். வைகை ஆற்றின் கரையோரம் அருள்பாலிக்கும் சாத்தாயி அம்மன் கையில் குழந்தையுடன் வீற்றிருக்கிறார். ஆவணி திருவிழா காப்பு கட்டுடன் நடந்து நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் வீதிகளில் பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.