உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் வரலட்சுமி பூஜை

கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் வரலட்சுமி பூஜை

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவில் வரலட்சுமி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, கோவிலில் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூ, சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பல்வேறு மலர்களால் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வரலட்சுமி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், குபேர லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தது.வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். பூஜைகளை வாராஹி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார்.குடும்ப நலம், செல்வ வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி உள்ளிட்ட நலன்கள் கிடைக்க வேண்டி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.பூஜையின் போது வரலட்சுமி தேவியை சிறப்பிக்கும் வகையில் மந்திரங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !