உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக தங்கச்சிமடம் தீர்த்த குளத்தில் மகா பூஜை

உலக நன்மைக்காக தங்கச்சிமடம் தீர்த்த குளத்தில் மகா பூஜை

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தீர்த்த குளத்தில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் உலக நன்மைக்காக மகா பூஜை நடந்தது. தங்கச்சிமடத்தில் உள்ள ருணவிமோசன தீர்த்த குளத்தில் பசுமை ராமேஸ்வரம், வீ த லீடர்ஸ் அமைப்பினர் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனைதொடர்ந்து நேற்று உலக நன்மைக்காக திருத்த குளத்தில் வேத விற்பன்னர் மந்திரம் முழங்க மகா தீபாராதனை, பூஜை நடந்தது. இதில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மா, ராமேஸ்வரம் நகர் சேவாபாரதி தலைவர் சுடலை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !