உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

 தேவகோட்டை: தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆவணி பூச்சொரிதல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !