சபரிமலை அருகே தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்
ADDED :19 hours ago
கூடலுார் கேரள மாநிலம், சபரிமலை அருகே நிலக்கல்லில் சமீபத்தில், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறந்து, தரை இறங்காமல் திரும்பி சென்றது. நிலக்கல்லில் பணியில் இருந்த போலீசாருக்கு எவ்வித தகவலும் அளிக்காததால், இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இயற்கை பேரிடர் மீட்பு பணிகளுக்கான பயிற்சியாக இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணையில், நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘அதிமனோகரம்’ படப்பிடிப்பிற்காக நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது தெரிந்தது.