உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டி.கோட்டம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி வழிபாடு

டி.கோட்டம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி வழிபாடு

பொள்ளாச்சி, டி.கோட்டம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி வழிபாடு நடந்தது.

பொள்ளாச்சி, டி.கோட்டம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை, உற்சவருக்கு திவ்ய திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. மதியம், தீபாராதனை, துளசி தீர்த்தம், சடாரி அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !