உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் ஆவணி மூல மகா உற்ஸவம்

கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் ஆவணி மூல மகா உற்ஸவம்

கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் 27ஆம் ஆண்டு ஆவணி மூல மகா உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஆக., 14 அன்று காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது.

நேற்று முன்தினம் மாலையில் விளக்கு பூஜை நடந்தது.

நேற்று காலை 7:00 மணிக்கு நாராயண சுவாமி கோயிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் பக்தர்கள் எடுத்து வந்தனர்.

பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு கீழக்கரை நகரின் வீதிகளின் வழியாக மயில் காவடி, வேல் காவடி, பறவைக்காவடி உள்ளிட்டவைகள் கோயிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை கீழக்கரை முத்துச்சாமிபுரம் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !