மணக்குள விநாயகர் கோவிலில் பிராமண மரபினர்கள் உற்சவம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 66ம் ஆண்டு பிரம்மோற்சவத்தின் பிராமண மரபினர்களின் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் 66ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 18 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, பிரம்மோற்சவத்தின் 5 நாளான நேற்று பிராமண மரபினர்கள் உற்சவம் நடந்தது. இதையொட்டி, காலை 11 மணிக்கு வேதபாராயண குழுவினரின் வேத பாராயணம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பிராமணர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை வேதராமன், ரமேஷ் மற்றும் பிராமண மரபினர்கள் செய்திருந்தனர். கோவிலில் திருப்பணி துவங்க உள்ளதால், சுவாமி புறப்பாடு இல்லாமல் உற்சவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.