உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் காழ்ச்சகுலை சமர்ப்பணம்

ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் காழ்ச்சகுலை சமர்ப்பணம்

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு, காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.


கேரள மாநிலத்தில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டி கையை முன்னிட்டு உத்திராடம் நாளான இன்று காலை சிறப்பு தாழ்ச்சீ வேலி என்ற செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தங்கக் கொடிமரம் கீழ், பக்தர்கள் மூலவருக்கு காணிக் கையாக, நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ தெக்கும்பரம்பத்து மனை நாராயணன் நம்பூதிரி, மூலவருக்கு முதல் நேந்திரன் பழ வாழைத்தார் காணிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, தேவசம் துறை அமைச்சர் முரளீதரன், கோவில் நிர்வாக குழு தலைவர் கோபிநாத், குழு உறுப்பினர்களான பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், பி. மனோஜ், ஷினிஜ, மாவட்ட கலெக்டர் சிகா சுரேந்திரன், கோவில் நிர்வாகி ஹரி கோபால் ஆகியோர் பழ காணிக்கை சமர்ப்பித்தனர்.அதன் பின், பக்தர்கள் மூலவருக்கு பழ காணிக்கை சமர்ப்பித்து வழிபட்டனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. இந்தப் பழங்கள், திருவோணம் நாளான இன்று நடக்கும் ஓண சத்யா சிறப்பு அன்னதானத்தில் பழம் பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !