உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மோப்பிரிபாளையம் ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

பெரிய மோப்பிரிபாளையம் ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கருமத்தம்பட்டி: பெரிய மோப்பிரிபாளையம் ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


கருமத்தம்பட்டி அடுத்த பெரிய மோப்பிரிபாளையத்தில் உள்ள ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் பழமையானது. இங்கு, கருவறை, விமானம், அர்த்த மண்டபம் ஆகியவை கற்களால் நிர்மாணிக்கும் திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து கடந்த, 20 ம்தேதி மாலை விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குடங்களை பக்தர்கள் எடுத்து வந்தனர். மாலை, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால ஹோமங்கள் , பூர்ணாகுதி முடிந்து, 23 ம்தேதி காலை, 8:45 மணிக்கு, ஸ்ரீ மாதேஸ்வரர் மற்றும் மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேக, அலங்கார பூஜைக்குப் பின், அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !