ஓணம் திருநாள்; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜை
கோவை; ஓணம் திருநாள் முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மாண்ட அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது.
தமிழ் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் ஓணம் பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது கேரளம் மற்றுமின்றி தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மலையாள மக்கள் இதை சிறப்பாக கொண்டாடுகின்றனர் இந்த பண்டிகை அவர்களின் பாரம்பரியமிக்க ஒரு விழாவாக கருதப்படுகிறது மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க திருமால் வாமனராக அவதாரம் எடுத்து மகபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டார் அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அதை கொடுத்ததார் முதல் அடியில் பூமியையும் இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர் மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அழித்ததாக கருதப்படுகிறது மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய நாட்டு மக்களை காண தமக்கு வரம் வேண்டும் என்று திருமால் இடம் வேண்டிய தை ஏற்று வாமனராக இருந்த திருமால் அருள் புரிந்தார் மகாபலி சக்கரவர்த்தி தன் நாட்டு மக்களை காண வரும் இந்த இந்த நாள் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் கோவில் கொடிமரம் முன்பு பூக்களால் கோலமிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.