உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய கொடிமரம்

குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய கொடிமரம்

மேட்டுப்பாளையம்; மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் முன் கொடிமரம் இருப்பது முக்கியம். அந்த கோவில்களில் திருவிழா நடைபெறும் போது, கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது என்பதை, பக்தர்களுக்கு அறிவிக்கும் விதமாக, கொடிமரத்தில் கொடியேற்றுவது வழக்கம். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருப்பணிகள் துவங்கிய போது, அறங்காவலர் குழுவினர் கொடிமரத்தின் தன்மையை ஆய்வு செய்தனர். மிகவும் பழமையான கொடி மரம் என்பதால், மாற்றி அமைக்க முடிவு செய்தனர். இதை அறிந்த கோவில் அருகே உள்ள பாச்சானூர் ஊர் மக்கள் கொடி மரத்தை அமைக்க முன் வந்தனர். 27 அடி உயரமுடைய, புதிய கொடிமரத்தை அமைத்து, அதை சுற்றி பீடம் அமைக்கப்பட்டது. கொடி மரத்திற்கு தாமிர தகடால் கவசம் அணிவிக்கப்பட்டது. கொடிமரம் அருகே மயில் வாகன பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவையும் பாச்சானுர் பொதுமக்கள் ஏற்று கொண்டு, கொடி மரத்தை அமைத்துக் கொடுத்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !