உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிக்கல்கள் தீர்த்து வைக்கும் முருக மந்திரம்!

சிக்கல்கள் தீர்த்து வைக்கும் முருக மந்திரம்!

அழகன் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மிக  அதிகம். வழிபாடுகளிலும், வழிபாட்டு முறைகளிலும்,  முருக பெருமானுக்குத்தான் பலவிதமான வழிபாடுகளும்,  நேர்த்திக் கடன்களும் இருக்கின்றன, என்கிறார்கள்  ஆச்சாரியார்கள்.

முருகப்பெருமானுக்கு எல்லா சிவாலயங்களிலும் சன்னதி  அமைந்திருக்கும். பெரும்பாலான சிவன் கோவில்களில்,  முருகக் கடவுளும் சாந்நித்தியம் கொண்டவராக  திகழ்வார். அறுபடை வீடுடையோன் என்று முருகக்  கடவுளைச் சொன்னாலும், ஆறு படை வீடுகள் என்று  சொல்லப்படும் கோவில்களையும் தாண்டி, ஏராளமான  முருகன் கோவில்கள் இருக்கின்றன. அதுவும் பிரசித்தி  பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன.

அதுபோல் பல அம்மன் கோவில்களிலும், முருகக்  கடவுளுக்கு சன்னிதிகள் இருக்கின்றன. அம்மையப்பன்  என்று சிவபார்வதியைச் சொல்வோம். அம்மை குடி  கொண்டிருக்கும் கோவில்களிலும், அப்பன் சிவனார் குடி  கொண்டிருக்கும் கோவில்களிலும், மைந்தன் கந்தனுக்கும்  சன்னிதிகள் இருக்கின்றன.

அறுபடை வீடுகள் எனும் பட்டியலுக்குள் வராத  வடபழனி, வயலூர், குமரன் குன்றம், குன்றத்தூர்,  விராலிமலை, மருதமலை முதலான ஏராளமான  கோவில்களில் இருந்து கொண்டே, தன் பக்தர்களின்  குறைகளைப் போக்கி அருளிக் கொண்டிருக்கின்றான்  அழகன் முருகன். வழிபாடுகளும், நேர்த்தி கடன்களும்  வேலவனுக்கு ஏராளம். காவடி எடுத்து வழிபடுவார்கள்.

வேல் எடுத்து வந்து பூஜிப்பார்கள். பால்குடம் ஏந்தி  வருவார்கள். பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.  பாலபிஷேகம் செய்வார்கள். முடி காணிக்கை  செலுத்துவார்கள். சேவல் வழங்குவார்கள்.

முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும்,  ஏற்றுக்கொண்டு அருள்வான் என்கிறார்கள் பக்தர்கள்.  அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி  வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம், பனி போல்  விலக்கி வைத்து அருள்வான். அடைந்த துன்பங்களில்  இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றி  தந்திடுவான் கந்தன்.


முருக மந்திரம்



ஓம் சௌம் சரவணபவ

ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம்

சௌம் நமஹ

எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை  செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள்.  செவ்வாய்க்கிழமையில் காலை, மாலையில் இந்த  மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்  விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த  மந்திரத்தை, 21 முறை, அல்லது 54 முறை, அல்லது 108  முறை சொல்லி வாருங்கள். அதேபோல்,  செவ்வாய்க்கிழமை என்று இல்லாமல், எல்லா நாளும்  தினமும் சொல்லி வழிபடுங்கள்.

நம் வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பான் வேலவன்.  சிக்கல்களை எல்லாம் போக்கி அருள்வான்  சிங்காரவேலன்.


ஓம்


உன்னை விழ வைத்தவர்கள் முன்பாக

உன்னை எழ வைப்பேன்.

உன்னை அழ வைத்தவர்கள் முன்பாக உன்னை வாழ  வைப்பேன்.


முயன்று கூட தோற்றவர்கள் உண்டு. முருகனை  வணங்கி தோற்றவர்கள் உலக அகராதியில் இல்லை.  சத்தியமாவது சரவணபவவே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !