உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருத்திகை நாளின் சிறப்புகள்

கிருத்திகை நாளின் சிறப்புகள்

* முருகன் வழிபாடு: ஒவ்வொரு மாதமும் வரும்  கிருத்திகை நாள், முருகனுக்கு உரிய சிறப்பான  நாளாகும்.

* கார்த்திகைப் பெண்கள்: முருகப்பெருமானை வளர்த்த  கார்த்திகைப் பெண்கள் (அகிலம் போற்றும் ஆறு  நட்சத்திரங்கள்) இவரை கவனித்துக் கொண்டதால்,  கிருத்திகை நட்சத்திரம் இவருக்கு மிகவும் பிடித்தமான  நாளாக மாறியது.

* தோஷங்கள் நீங்கும்: இந்நாளில் முருகனை  வணங்கினால் கர்ம வினைகள் நீங்கும், திருமணத்  தடைகள் அகலும் மற்றும் செவ்வாய் தோஷம் குறையும்.

* பால் பல விரதம்: கிருத்திகை அன்று பால், பழம்  மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது உடல் நலத்திற்கும்,  ஆன்மீகத்திற்கும் ரொம்பவும் சிறப்பு.


ஆடிக் கிருத்திகையின் சிறப்புகள்:

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களில்  கிருத்திகை நட்சத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது 12 தமிழ் மாதங்களிலும் கிருத்திகை  நட்சத்திரம் வருகின்ற போதும், ஒரு ஆண்டில் ஆடி  கார்த்திகை, தை மாதத்தில் வரும் கிருத்திகை நாட்கள்  மிகவும் விசேஷமான நாட்கள் என்று கூறப்படுகின்றது.

* தேவர்களின் மாலைக்காலம்:

* தட்சிணாயன புண்ணிய காலத்தில் ஆடி மாதம்  தேவர்களின் சாயரட்சை காலமான மாலைப்பொழுதாக  கருதப்படுகிறது. அதனால் ஆடியில் வருகின்ற  கார்த்திகை தினத்தன்று விரதம் இருப்பது சிறப்பாகவும்,  உயர்வாகவும் கருதப்படுகிறது.

* ஆடி மாதத்தில் தொடங்கி, ஆறு மாதங்கள் கார்த்திகை  விரதம் இருந்து, தை மாத கார்த்திகையில் விரதத்தை  முடிப்பார்கள்.

* கிருத்திகையில் முருகனை வழிபட சகல  ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதுடன், ஆடி  கிருத்திகையில் வழிபட, முருகன் கேட்ட வரமெல்லாம்  தந்தருள்வார் என்பது நம்பிக்கை.

* மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக  கருதப்படுவதுடன், பார்வதி தேவி தனது சக்தி  அனைத்தையும் திரட்டி, முருகனிடம் வேல் கொடுத்ததன்  காரணமாக, ஆடி கிருத்திகை தினத்தன்று வடிவேல்  முருகனை தரிசிக்க பக்தர்கள் அலைகடலாக திரண்டு  வருகின்றனர்.

எதனால் சிறப்பு:

* முருகப்பெருமானை சீராட்டி, தாலாட்டி வளர்த்தது  கார்த்திகை பெண்களே ஆவார். அதனால் கார்த்திகை  பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திட,  சிவபெருமானும், பார்வதி தேவியும் அருள் புரிந்தனர்.  எனவேதான், மாதந்தோறும் வரும் கிருத்திகை  நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் வழிபாடு சிறப்பாக  நடத்தப்படுகிறது.

* ஆடி மாதம் கிருத்திகை தினத்தன்று,  முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து கந்த சஷ்டி  கவசம், கந்தபுராணம், சண்முக கவசம் போன்ற முருகன்  பாடல்களைப் படிப்பது சிறந்ததாகும்.

* ஆடி கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பால், பழம்  மட்டும் எடுத்துக்கொண்டு, உணவு சாப்பிடாமல் இருப்பது,  குடும்பத்தின் வளர்ச்சிக்கு மிக உகந்ததாக இருக்கும்.

* கிருத்திகை விரதத்தை தொடர்ந்து, 12 ஆண்டுகள்  கடைபிடிப்பவர்கள் வாழ்வில் பெரும் வெற்றிகளை  அடைந்திடலாம். விரதம் இருக்கும் கன்னிப்  பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து, குழந்தை  பாக்கியமும் கிடைக்கும்.

* கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை,  விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு, நிறைவான அறிவு,  செல்வம், நீண்ட ஆயுள், கீர்த்தி போன்றவை கிடைக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், கவலைகள்  நீங்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்.

* எனவே ஆடி கிருத்திகை நாளில் முருகன் கோவிலுக்கு,  அவசியம் குடும்பத்துடன் அனைவரும் சென்று  வணங்குவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !