உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் ஆறெழுத்து மந்திர மகிமை

முருகனின் ஆறெழுத்து மந்திர மகிமை

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன்,  சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு  திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை  தமிழ் கடவுள் என்று தமிழ்ச் சமூகம், உரிமையோடு  போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின்  கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின்  குறைகளைப் போக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து  அருள் புரிபவர் முருகன். சிவபெருமானின் நெற்றிக்கண்  மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த,  ஆறுமுக கடவுளான முருகப்பெருமானின், அவதார  நட்சத்திரம் வைகாசி விசாகம்.

அதன் காரணமாகவே அவனுக்கு விசாகன் என்ற  திருப்பெயரும் உண்டு அப்படி முருகன் அவதரித்த  வைகாசி விசாகத்தின் சிறப்புகளை பற்றி தெரிந்து  கொள்வோம். பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை  மாதம் பூசம் போல, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை  போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருக கடவுளுக்கு  உகந்த அற்புதமான நாள்.

தமிழ் கடவுள் முருகன் அவதரித்த தினமாக வைகாசி  விசாகம் திருவிழா, உலகெங்கிலும் வாழும் தமிழக  மக்களால் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில்  பால்குடம் எடுத்தும், காவடிகள் சுமந்தும், பக்தர்கள்  வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

வைகாசி விசாகம் நாளில், விரதம் இருந்து  முருகப்பெருமானை தரிசனம் செய்தால் என்னென்ன  நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.  நட்சத்திரங்கள் 27ல், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு  உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம்  எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த  அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம்  நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக,  பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாகத்  தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து  சேரும்.

தீமைகள் அழிப்பதற்காக சிவனின் நெற்றி கண்ணில்  இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த  அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில் தான்.  பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதத்து பூசம்  போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல,  வைகாசி மாதத்தில் விசாகம், முருக கடவுளுக்கு உகந்த  அற்புதமான நாள். வைகாசி விசாகம்  கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முருகன்  ஆலயங்களில் பல லட்சம் பக்தர்கள் வழிபடுவார்கள்.  வைகாசி விசாகம் நாளில், வீட்டில் கந்த வழிபாடு  செய்வது ரொம்பவும் விசேஷம்.


வெற்றி கிடைக்கும்

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும்,  வைகாசி விசாக விழாதான், வளர்ச்சியை கொடுக்கும்  விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று  முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்.  வேலவன் அருளால் விரும்பியது நடக்கும். எனவே தான்  திருச்செந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது  ஆலயங்களில், இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடி  மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின்  சன்னதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம்  கிடைக்கும்.


இடையூறு சக்திகள் விலகும்

கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர்  கந்தப்பெருமான். அவரது வேலை வணங்குவதே  வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத்  திருநாளாகும். இந்த நாளில் இன்றைய நாளில்  பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து  வழிபட்டால், இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள்  நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில்  விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு, அருகில் உள்ள  முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம்.  கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும்  நினைத்து வழிபட்டு வரலாம்.


செல்வம் பெருகும்

வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து  வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து  கொண்டால், அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜை  அறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து  வழிபடலாம். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம்,  தயிர்சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம்  செய்தால், திருமண பேறு கிட்டும். குழந்தை பேறு  உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம்  இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து  செல்வங்களும் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

ஆபத்து விலகும் மந்திரம்

வேடவேந்தன் திருமகள் வள்ளி விரிந்த நகில்கள்  மீதயாந்த

தேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து

நிகழும் நின்றன் தடமார்பு

நாடும் அடியர் துன்பம் துடைத்து

நலமே பொங்கச் சிவந்துவிடும்

கோடிய தாரகன் தன்னைக் கடிந்த

குமரன் மார்பைப் போற்றுகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !