எலவனாசூர்கோட்டை ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :1 days ago
உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ராஜநாராயண பெருமாள் கோவிலில் சுவாமிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு சுவாமிக்கு திருமஞ்சனம், திருப்பள்ளி எழுச்சி. திருப்பாவை நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள். தீபாரதனை வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.