/
கோயில்கள் செய்திகள் / ராக்கியாபாளையம் விநாயகர், மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம்
ராக்கியாபாளையம் விநாயகர், மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம்
ADDED :3 days ago
அவிநாசி; ராக்கியாபாளையம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி அடுத்த ராக்கியபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும் 30ம் தேதி காலை 7:15 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.