மணலூரில் முருகன் கோவில் கட்ட திருப்பணிக்கான பூமி பூஜை
ADDED :3 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூரில் மிகவும் பழமையான முருகன் கோவில் திருப்பணிக்கான பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலூரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு பாதி கட்டி முழுமை பெறாமல் இருந்த முருகன் கோவில் இருந்து வந்தது.பல ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த முருகன் கோவிலை பார்த்த பொதுமக்கள் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்று ஒன்று கூடி பேசி முடிவு எடுத்தனர்.தற்போது இந்த கோவிலை புதிதாக கட்ட ஏற்பாடு செய்தனர். திருப்பணிகள் நடைபெற ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.