ரக்ஷா பந்தன்; உஜ்ஜயினி மகாகாலேஷ்வரருக்கு ராக்கி கட்டி சிறப்பு பூஜை
ADDED :31 minutes ago
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், பஸ்ம ஆரத்தி செய்யப்பட்டது.
மத்தியப்பிரதேசம், உஜ்ஜயினியில் உள்ள உலகப் புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில் சிறப்பு மத மரபுகளுடன் ரக்ஷாபந்தன் இன்று கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து மகாகாலேஷ்வரருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ராக்கி கட்டப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.