சிங்கம்புணரி மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் போஸ்ட் ஆபிஸ் பின்புறம் உள்ள மங்கள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக. 27 ல் கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் தொடங்கியது. அருணகிரி, சேவற்கொடியோன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பூஜகளை நடத்திவைத்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பணிக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.