உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வீரமாட்சி அம்மன் நல்ல கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்

பழநி வீரமாட்சி அம்மன் நல்ல கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்

பழநி: பழநி இந்திரா நகர் கவுண்டர் இட்டேரி ரோடு பகுதியில் எழுந்தருளியுள்ள வீரமாட்சி அம்மன் நல்ல கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


பழநி, இந்திரா நகர், கவுண்டர் இட்டேரி ரோடு பகுதியில் எழுந்தருளியுள்ள கன்னிமூல வலம்புரி விநாயகர், நல்ல கருப்பண்ணசாமி, வீரமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. அதற்கென ஆக 27.,ல் காலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கியது. நேற்று ஆக.,28., காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. அதன் பின் யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் எடுத்துவரப்பட்டு காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் சிறப்பு பூஜை, நடைபெற சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !