உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில் வழங்கப்பட்ட தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ ராமானுஜர் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு, கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆத்தூர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம், கிராம பொங்கல் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !