உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் மொபைல் போனுக்கு தடை

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் மொபைல் போனுக்கு தடை

திருவேற்காடு: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், செப்., 1ம் தேதி முதல், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருவேற்காடில் புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், செப்., 1ம் தேதி முதல், திருவேற்காடு கோவிலுக்கு உள்ளே மொபைல் போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வசதியாக, மொபைல் போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த மையங்களில், 5 ரூபாய் செலுத்தி, பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !