உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

சிறுபாக்கம் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

சிறுபாக்கம்:  சிறுபாக்கம் அருகே ஶ்ரீ செல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.


சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 8 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, பூ போடுதல், ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், ஶ்ரீ செல்லியம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து தேர் திருவிழா துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில், சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !