/
கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மஹா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மஹா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது
ADDED :20 hours ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கவுள்ள நிலையில், இன்று மஹா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
இக்கோயில் கும்பாபிஷேகம் செப்.17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கோயில் பரிவார மூர்த்திகளுக்கு செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இன்று மஹா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
58 இடங்களில் பார்கிங் வசதி
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். கோயில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. கும்பாபிஷேகத்திற்காக செய்ய வேண்டிய பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 58 இடங்களில் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட உள்ளது. கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. கும்பாபிஷேகம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும் என்றனர்.